ஜெனீவாவைக் கையாள்வதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்ற தனி ஓட்டம் ஓடும் மக்கள் பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்தும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை), இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட ஜெனீவா விவகாரத்தில் சுமந்திரன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள் எனவும் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா விவகாரத்தில் அரச தரப்புக்கே செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதில் அரச பிரதிநிதியில்லாதவர்களுக்கு பங்களிப்பு கிடைப்பது குறைவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய யாப்பு ஒரு நாட்டின் பிணக்குக்கு காரணமாக விடயங்களை நீக்கி, திருத்தி அமைத்தலே சிறந்தது எனவும் நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்