அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு பின்புறமாக உள்ள நல்லை ஆதீனம் முன்பாக நடைபெறவுள்ள இப்போராட்டத்தை குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, இப்போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.