இலங்கையில் அண்மையில் தேர்தெடுக்கப்பட்ட புதிய உதைப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமிர் அலாஜிக் தெரிவு செய்த 22 பேர் அடங்கிய இலங்கை உதைப் பந்தாட்ட அணி, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது. அந்தவகையில், இந்தப் பயிற்சிகள் 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 03ஆம் திகதி பெத்தாகானயில் அமைந்திருக்கும் தேசிய பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கவிருக்கின்றன.
முதல் கட்டமாக நடைபெறும் இந்தப் பயிற்சிகள் (இரண்டு வாரங்கள், அதாவது ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை) நடைபெறும் என இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இந்தப் பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உதைப்பந்தாட்ட வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை உதைப்பந்தாட்ட அணி உலகக் கிண்ண மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப் பட்டிருந்தன. எனவே, பயிற்சிகளை மீள ஆரம்பிக்கும் இலங்கை உதைப்பந்தாட்ட அணி இந்த தகுதிகாண் தொடரினை கருத்திற் கொண்டு செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி உதைப்பந்தாட்ட பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் அணியில் சுந்தராஜ் நிரேஷ் என்னும் ஒரேயொரு தமிழ் வீரரும், எம்.ஏ. நுவான் , அப்துல் பாஸித், , ஜூட் சுபன், அஹமட் சஷ்னி, அஷிகுர் ரஹ்மான், மொஹமட் சபீர் ரசூனியா, றஹ்மான், , , , றிப்கான் மொஹமட், அஹமட் வஸிம் ராஸிக், ஆகிய 9 இஸ்லாமிய வீரர்களும் அடங்குவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.