கிளிநொச்சியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையினால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இதேவேளை சில குளங்கள் வான்பாய்ந்து வருகிறது. அதாவது, கனகாம்பிகைகுளம் 7 அங்குலம் வான்பாய்ந்து வருவதுடன் பிரமந்தனாறு குளம் 3 அங்குலம் வான் பாய்கின்றது.
இவ்வாறு பிரமந்தனாறு குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதால், பிரமந்தனாறு- மயில்வாகனபுரம் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கனகாம்பிகைக்குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, கனகாம்பிகைக்குளம், பன்னங்கண்டி, பரந்தன் பகுதிகளிலுள்ள மக்களையும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.