(மன்னார் நிருபர்)
(30-12-2020)
மன்னார் – மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தரின் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர் வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் சந்தேகநபர் இன்று புதன் கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, சந்தேகநபர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இன்று புதன் கிழமை (30) மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை, நீதிமன்றத்திற்கு நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் அதிகாரிகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.