யாழ்ப்பாணம் மாநகர சபையில் பெரும்பான்மையான அங்கத்தவர்களைக் கொண்டிருந்தும் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிடம் மேயர் பதவியை கைநழுவ விட்ட சம்பவம் யாழ்ப்டபாண மாநகரசபை வரலாற்றில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத் தமிழர் அரசியல் வரவாற்றில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவே கருதப்படுகின்றது.
இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் ஈபிடிபி கட்சியின் ஆதரவை எதிர்பாராத விதமாகப் பெற்ற சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கெனவே தோல்வியடைந்த முன்னாள் மேயர் இ. ஆனோல்ட் அவர்களை போட்டியில் நிறுத்த வேண்டாம் என்று பல தரப்பிலும் எச்சரிக்கை செய்தும் அதை செவிமடுக்காமல் மாவை சேனாதிராஜாவின் முட்டாள்த்தனமான முடிவே இந்த தோல்வியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் யாழ்ப்பாணத்தில் இன்னு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று புதன்கிழமை காலை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும் போட்டியிட்டார்..
இந்நிலையில் இன்று பதன்; இடம்டபெற்ற வாக்கெடுப்பில் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும், இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாக்களிப்பில் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
ஏனைய 41 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் உட்பட 21 உறுப்பினர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும் உள்ளடங்கலாக 20 உறுப்பினர்கள் இம்மானுவேல் ஆர்னோல்ட்க்கு ஆதரவு வழங்கினார்கள்.
இவ்வாறாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் சடடத்தரணி வி.மணிவண்ணன் யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவாகியுள்ள விடயம் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொழும்பு அங்கத்தவர்கள் மத்தியிலும் மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைத்த செய்தி தெரிவிக்கின்றது