பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள .தொ.கா உப செயலாளரும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி கடந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகள் தங்களது பணிப்பாளர் குழாம் மற்றும் தலைவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் 31ம் திகதி கூடுவதாக கூறி இருந்தனர். எனினும் காலம் போதாமையினால் முதலாளிமார் சம்மேளனம் தொழில் அமைச்சரிடம் 7ம் திகதி வரை பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே இன்றைய தினத்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் இ.தொ.காவினர் காணோளி ஊடாக கலந்து கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தது.
ஆனால் இ.தொ.காவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தான் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உறுதியாக இ.தொ.காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பபை பெற்றுக்கொடுக்கும். அதுகுறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.