அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆணைக்குவின் பரிந்துரையின் கீழ் அடுத்து வரும் ஓரிரு வாரங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மரண தண்டனை கைதியுமான துமிந்த சில்வா விடுதலை செய்யப்படலாம் என அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரத லக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் இது தொடர்பில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் துமிந்த சில்வா சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முதலில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்க முடியும் என ஆணைக்குழு முடிவுக்கு வந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
அதனால் ஜனாதிபதி பொது மன்னிப்பில் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய ஆணைக்குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளைஇ துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.