யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த தகவல்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ளன.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனரன்.
மன்னார் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து ஒருவர் வந்து தங்கிச் சென்றிருந்ததாகவும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் மன்னாரைச் சேர்ந்த குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கிளிநொச்சி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கேகாலை மாணவன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொக்குவில் கொழும்பு சென்று திரும்பியவர்
இணுவில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கனடா உதயன் ஊடகவியலாளருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.