விக்னேஸ்வரன் “ஜெனிவாவில் அரசாங்கத்திற்காக செயற்படும் சுமந்திரன்! பொய், புரட்டை நிறுத்துங்கள்” என்கிறார். ஏதோ இவர் அரிச்சந்திரன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறவர் போல பேசுகிறார். சுமந்திரனுக்குப் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. புரட்டுச் சொல்ல வேண்டிய தேதை அடியோடு இல்லை. அவர் எப்போதும் உண்மை பேசுபவர். அதனால் மற்றவர்களது விமர்சனத்துக்கு உள்ளாகிறவர்.
சுமந்திரனுக்கு இராசபக்ச அரசை ஆதரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை. 2018 ஒக்தோபரில் இராசபக்சாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தவர் வேறு யாரும் இல்லை. சுமந்திரன்தான். அப்போது காப்பாற்றதவர் இப்போது ஏன் இராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்ற வேண்டும்?
உண்மை என்ன வென்றால் விக்னேஸ்வரன் எப்போதும் பொய் சொல்கிற ஒரு மனிதர்.
ததேகூ இன் சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று வந்த பின்னர் “நான் வெற்றி பெற்றது எனது சொந்த செல்வாக்கில். ததேகூ இன் செல்வாக்கில் இல்லை” என்று பச்சைப் பொய் சொன்னார்.
வட மாகாண சபைத் தேர்தலில் 132,255 விருப்பு வாக்குகள் பெற்ற விக்னேஸ்வரன் 4 கட்சிகளின் மெகா கூட்டணி சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 21,554 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
அதாவது மாகாண சபை தேர்தலில் கிடைத்த விருப்பு வாக்குகளோடு ஒப்பிடும் போது 16.3 விழுக்காடு வாக்குகளே பெற்றிருக்கிறார். வட மாகாண சபைக்கு வாக்களிக்கும் வாழ்க்காளர்களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 60 விழுக்காடு வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
விக்னேஸ்வரன் கடவுள் அவதாரம் என நம்பிய பிரேமானந்தா ஒரு கொலை, 13 பாலியல் வல்லுறவு இரண்டிலும் குற்றவாகளியாககக் கண்டு புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி பானுமதி இரட்டை ஆயுள் – ஒன்றைத் தொடர்ந்து மற்றது – தண்டனை விதித்தார்.
பிரேமானந்தா சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்த போது அந்தத் தண்டனையை அந்த நீதிமன்றம் உறுதி செய்தது.
அதிலிலுந்து பிரேமானந்தா இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்தார். மனுதாரர் சார்பில் விக்னேஸ்வரன் தோன்றி வாக்கு மூலம் அளித்தார். அவரது சாட்சியத்தை செவி மடுத்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் விக்னேஸ்வரன் ஒரு கற்பனாவாதி (Wishful thinker) என அவரது தலையில் குட்டியது. முதலமைச்சராக இருந்த போது பிரேமானந்தாவோடு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் சார்பாக 10-03-2015 தேதியிட்ட கடிதம் ஒன்றை பாரதப் பிரதமர் மோடிக்கு எழுதினார்.
அதில் “சுவாமி பிரேமானந்தாவுக்கு எதிராக 1994 ஆம் ஆண்டு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு தொடரப்பட்டது. அதன் நோக்கம் அவரது பெயரைக் களங்கப்படுத்துவதாகும். அவரும் வேறு சிலரும் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு ஒரு போதும் இடம்பெறாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டார்கள். இந்த வழக்குத் தொடர்பான உண்மைகள் மற்றும் நீதி பரிகாசப்படுத்தப் பட்டது திரு ராம் ரத்மலானி அவர்களுக்குத் தெரியும்.
“இன்று சுவாமி உயிரோடு இல்லை. அவர் 21-02-2011 இல் ஜீவசமாதி எய்திவிட்டார். இருந்தும் அவரது ஆசிரமம் திறமையாக நடத்தப்படுகிறது. புனிதமான நாட்களிலும் மற்றும் நிகழ்வுகளிலும் வெளிநாட்டு பக்தர்கள் உட்பட அவரது பக்தர்கள் ஆசிரமத்தில் திரளுகிறார்கள். அவர்கள் பிரேமானந்தாவை ஒரு அவதாரம் எனக் கருதுகிறார்கள்.
அண்மைக் காலங்களில் அவரது சிலையில் இருந்து சந்தனத் தூள் கொட்டுகிறது. அண்மையில் சிறிலங்காவில் ஒரு பன்னாட்டு மாநாடு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. சிறிலங்காவே பிரேமானந்தாவின் பிறப்பிடம் ஆகும்.
” ஒன்றல்ல இரண்டு நீதிமன்றங்கள் உறுதி செய்து தீர்ப்பளித்த வழக்கு பொய் வழக்கு என்கிறார் விக்னேஸ்வரன். ஒரு போதும் இடம்பெறாத குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டார்கள் எனப் பச்சைப் பொய் சொல்கிறார்.
விக்னேஸ்வரன் சாதாரண ஆள் இல்லை. இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இப்படியான திருக்கல்யாண குணங்களைக் கொண்ட ஒருவர், ஒரு காமுகனைக் கடவுள் அவதாரம் என்று நாக்கூசாமல் பொய் சொல்லும் ஒருவர், கொலை மற்றும் கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்தவர்கள் சுற்றவாளிகள் அவர்கள் மீதான வழக்கு பொய் வழக்கு என்று சொல்லும் ஒருவர் எப்படி உச்ச நீதிமன்ற நீதியரசர் ஆனார் என்பது வியப்பாக இருக்கிறது!
நக்கீரன்