கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட கண் பார்வை திறனை இழந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமது பயனாளிகளின் பாடசாலை செல்லும் 30 பிள்ளைகளுக்கு சீருடைத்துணிகளும் புத்தகப்பைகளையும் தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பினால் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 64, 245 பெறுமதியில் 30 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் பாடசாலை சீருடைத்துணிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.