ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள Tendercare முதியோர் இல்லத்தில் ஏற்கெனவே பல மரணங்கள் சம்பவித்த நிலையில் மேலும் அதிகளவு மரணங்கள் சம்பவித்தது தொடர்பாக அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த முதியோர் நிலையத்தில் கொரோனாத் தொற்று காரணமாகவே பல மரணங்கள் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துள்ள நிலையில், தொடர்ந்தும் மரணங்கள் சம்பவிப்பதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகளிடமிருந்தும், அரசியலவாதிகளிடமிருந்தும் கருத்துக்களை கேட்பதாகவும் எமக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக நோர்த் யோர்க் வைத்தியசாலை நிர்வாகம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காட்டுவதாகவும் மேற்படி முதியோர் இல்லத்தினரும் அதில் அக்கறை காட்டுவது இல்லை என்றும் ஸ்காபுறொ தென்-மேற்கு தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி டொலி பேகம் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
“மேற்படி ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள Tendercare முதியோர் இல்லத்தில் ஏற்கெனவே சம்பவித்த மரணங்களோடு தற்போது மரணங்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது என்றும், இவற்றைப்பபற்றி ஆட்சியில் உள்ளவர்கள் எவருமே கவனிப்பது இல்லை என்றும் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக ஒன்றாரியோ மாகாண அரசு 10000 பணியார்களை புதிதான வேலைக்கு அமர்த்தியிருப்பதாக கூறியிருந்தாலும், அது ஒழுங்காக இடம்பெறுகின்றதா என்று யார் கவனிக்கின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்