நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் தூபி இடிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து தற்போது யாழ் பல்கலை கழகம் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா தெரிவித்துள்ளார்
தற்பொழுது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் க்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சற்குணராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார் தற்போதுள்ள அசாதாரணநிலையினை அடுத்து தற்பொழுது பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்கான பொறுப்பை பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
அது அரச நிறுவனத்திற்கு எதிராக அசாதாரண நிலை ஏற்படும்போது அதனை பாதுகாக்கும் பொறுப்பு வழமையாக பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் அதேபோலவே யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கும் தற்பொழுதுள்ள அசாதாரண நிலையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே குறித்த போராட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஏற்படும் சம்பவங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளார்