(மன்னார் நிருபர்)
(11-1-2021)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
-பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
-இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் புரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் மக்கள் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
தனியார் போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டது.மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை.
மன்னார் நகரில் உள்ள பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
மேலும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட்டதோடு அரச திணைக்களங்கள் வழமை போல் செயல் பட்டது.
மேலும் பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டது. இதனால் இன்றைய தினம் மன்னார் மாவட்டம் முழுமையாக முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.