பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய நபர் ஒருவருக்கே, குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில் இதனை கண்டறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.