கனடாவில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாகாணம் முழுவதற்குமான அவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பை நேற்று மதியத்திற்கு சற்று பின்னர் அறிவித்த முதல்வர், மாகாணத்தில் எழுந்துள்ள கோவிட்-19 தொற்றின் அதிகரிப்பை எதிர்கொள்வற்காகவும், மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்த முடிவை தானும் தனது அமைச்சரவையும் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி முதற்படியாக மாகாணத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக ‘வீட்டுக்குள்ளே இருங்கள்’ என்ற கடுமையான அறிவிப்பையும் முதல்வர் விடுத்துள்ளார்.
இதற்கான முதன்மைக் காரணங்களை அறிவித்த முதல்வர் முக்கியமாக கடந்த இருவாரங்களில் மாகாணத்தில் கோவிற்-19 தொற்றாளர்கள் இரண்டு மடங்காக அதிகரித்து பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் மாகாணத்தின் அதிகமான வைத்தியசாலைகளில் அதிகளவு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக இங்குள்ள முதியோர் இல்லங்களிலும் அதிகமான உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதாகுவும், எனவே கோவிற்-19 தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய மா பெரும் பொறுப்பு தமக்கு உண்டெனவும் அவர் தெரிவித்தார் ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பை முதல்வர் டக்போர்ட் அவர்கள் மாகாண பாராளுமன்றத்தில் முன்வைத்த போது, அவருட்ன் மாகாணத்தில் பிரதி முதல்வரும் சுகாதார அமைச்சருமான கிறிஸ்ரின் இலியட், .நீதித்துறை அமைச்சர் சில்வியா ஜோன்ஸ்ஈ மாகாணத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிற் வில்லியம்ஸ் ஆகியோர் உட்பட பலர் கூட இருந்து தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
முதல்வர் டக்போர்ட் தொடர்ந்து உரையாற்றுகையில் ” மாகாணத்தில் பிந்திக் கிடைத்த மருத்துவ பரிசோதனை பெறுபேறுகளின் படி, தொற்றாளர்கள் அதிகரிப்பதால், வைத்தியசாலைகள் இடநெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. முன்வரிசைப் பணியாளர்கள் ஆகியோர் மிகவும் நிரமங்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாம் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம் என எமது மருத்துவக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
எனவே தான் இந்த வீட்டிலேயே இருங்கள் என்ற கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டியுள்ளது இந்த உத்தரவிற்கு இணங்க மக்கள் தங்கள் அவசர மற்றும் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லலாம் என்ற கட்டுப்பாட்டை நாம் விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முக்கியமான இரவு நேரங்களில் தேவைகள் எதுவும் இல்லாமல் வெளியே செல்வது சட்டத்திற்|கு முரணான செயல் என அவர்கள் தண்டிக்கப்படவும் நேரிடலாம்” என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜனவரி மாதம் 14ம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 12.01 மணி தொடக்கம் இநத ‘வீட்டற்குள் இருங்கள்’ என்ற உத்தரவு அமுலுக்கு வருகின்றது இந்த உத்தரவின் படி மிகவும் அவசியமானவையாகக் கருதப்படும் மருந்துவகைகள் வாங்கவும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும், வேறு ஏதாவது மிகவும் அவசியமான அவலுவல்களைக் கவனிப்பதற்காவும் வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் ” என்று முதல்வர் டக்போர்ட் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாகாணத்தில் சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில் மாகாணத்தில் வாழும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மிக அவசியமான நடைமுறைகளைக் கூறி, அவை எமது உடல் நலத்திற்கு எவ்விதமான கெடுதல்களையும் தராமல் பாதுகாக்கும் என்றும் கூறினார்