கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையங்கள் பேரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள், செயற்றிறன் மிக்க மற்றும் சுகாதார மிக்க முறையில் மேற்கொண்டமைக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
சர்வதேச நாடுகளில் காணப்படும் விமான நிலையங்களில் உள்ள சுகாதார பாதுகாப்பு நடைமுறை, அதனை பின்பற்றுதல் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்களை குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், குறித்த செயற்றிட்டங்களுக்கு அமைவான நியமங்களைப் பின்பற்றி செயற்பட்டமைக்காக, குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கான சான்றிதழ் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானகவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.