நல்லாட்சியில் நடந்த அசிங்கங்களைக் கண்டுகொள்ளாத கூட்டமைப்பு தன்மீது பரராஜசிங்கம் விவகாரத்தில் வீண்பழியைச் சுமத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜோசப்பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு தோல்விஅடைந்தார்.விடுதலைப்புலிகள் அன்றைய காலத்தில் வெற்றிபெற்றவர்களை கொலைசெய்துவிட்டு வேறு நபர்களை நியமனம் செய்தது.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.அது தொடர்பில் எந்தவித விசாரணைகளையும் செய்யப்படவில்லை.
பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடாத்தியபோது கண்டுகொள்ளாதவர்கள் இன்று ஊடகதர்மம்,சட்டம்,பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் குரல்கொடுக்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை தண்டிக்கவேண்டும் மற்றவர்களை விடுதலைசெய்யவேண்டும் என இரட்டைமுகத்தினை காட்டுகின்றனர்.
நான் ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது.ஒரு தடைவை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். இவ்வாறான நிலையில் அவரை கொலைசெய்ததாக வீண்பழியை சுமத்தி சிறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைத்தது” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பிட்டார்.