எங்கள் குடும்ப விளக்கின்
31ம் நாள் நினைவாஞ்சலியும் நன்றி நவிலலும்
அன்னையின் மடியில் 23-04-1935
ஆண்டவன் அடியில்: 18-12-2020
திரு கதிர் துரைராசா
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும்., காலஞ்சென்ற கதிர்-செல்வி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதிகளின் மகளாகிய எமது அம்மாவை திருமணம் செய்து சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையின் மறைவின் 31ம் நாள் நினைவஞ்சலி நாளில் அவரது நினைவுகளைப் பகிர்ந்த கொள்கின்றோம்
நால்வராய் எம்மைப் பெற்றெடுத்து அனைத்துச் செல்வங்களையும் எமக்காய்த் தேடித் தந்து, இறுதிவரை மகிழ்வித்தார்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் அப்பாவின் நினைவுகள் எம்மோடு கூடவே குடியிருக்கும்
என்றும் அவர் பிரிவால் தவிக்கும் அவரது அன்பு மனைவி துரையம்மா,மகள் தேவி, மருமகன் ஜெகா மகன்மார் ரவி(சுவிஸ்) புவி (சுவிஸ்) பாஸ்கல்(சுவிஸ்) மற்றும் மருமக்கள் வவி, நாதியா, லலிதா, மற்றும் பேரப்பிள்ளைகளான நிரு, நிமல், நிசான்த், பிரியா, றுபிந்தா, யசி, தனு, மது, திரியங்கா, ஜானிஸ், ஜோயல் அனினா, மற்றும் அக்காமார் சோதிப்பிள்ளை இராசம்மா, தங்கை சரஸ்வதி, தம்பி பாலசிங்கம், பெறாமகன் பஞ்சலிங்கம், பெறாமகள் தரிசா, மைத்துனன் சுந்தரம், (அவுஸ்த்திரேலியா) மற்றும் பத்மா-பிள்ளைகள்
எங்கள் அப்பாவின் துயரச் செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி மூலமாகவும் தங்கள் அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் பல நாடுகளிலிருந்தும் மலர் வளையங்கள் மறறும் கண்ணீர் அஞ்சலிகள் அனுப்பியவர்களுக்கும், அறிவித்தல்கள் மற்றும் உணவு வகைகள் ஆகியவற்றை உறவுகள் மூலம் வழங்கியவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது அன்பு அப்பாவின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போமாக!
தொடர்புகளுக்கு
தேவி:- 647 438 4186, புவி:- 41-794490809, பாஸ்கல்:- 41 77 4001029