இல்ஙகையின் கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், வாள்வெட்டுக்கு இலக்காகி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள ஊறணி என்று கிராமத்திலுலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்த போது இனந்தெரியாத குழுவினரால் வாள்வெட்டுக்கிலக்காகியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
அவர் தங்கியிருந்த மேற்படி விடுதிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர் அவரை வாள்கள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் அவர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வியாழன் இரவு 07 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் வெளியிட்டுள்ள |ஊடகப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவ தினமான நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் பிரதி தவிசாளார் அவரது விடுதியில் நண்பர்களோடு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது மதில் மீதேறி வந்த இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் அவர் சத்தம் எழுப்பியுள்ளார். இவ்வேளையில் அங்கிருந்த அவரது தந்தை மகனது அவலக் குரல் கேட்டு ஓடிச்சென்றதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.எனவும் கூறப்படுகின்றது
இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.