நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி இன்றைய தினம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
சட்டத்தரணிகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவை பத்திரம் முன்வைத்துள்ளமையை கண்டித்து சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை ஏற்றுக் கொண்ட போதிலும், சட்டத்தரணிகளை பொலிஸ் அதிகாரிகளாக நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.