இலங்கையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டிய வர்த்தக நிலையங்கள், நாளை முதல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 15 ஆம் திகதி 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, நாலபிட்டிய நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்தது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் இன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், நாளை முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் எனவும் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை கண்டி -நாவலப்பிட்டிய பகுதியில், இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் காலங்களிலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது