கடந்த சில மாதங்களாக வெற்றிடமாகவிருந்த கனடாவின் ரொரன்ரோ நகரசபைக்கான வட்டாரம் 22 இற்கு புதிய கவுன்சிலரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளின்படி 24 மொத்த வேட்பாளர்களில் Nick Mantas என்பவர் 3021 வாக்குகளைபெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கட்டுள்ளார் என ரொரன்ரொ நகர சபை வட்டாரங்களிலிருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அடுத்து வரும் கிழமை நாட்களில நகர சபையின் பிரதம எழுதுனரின் மேற்பார்வைக்குப் பின்னரே இந்த வெற்றி உறுதி செய்யப்ப்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றுள்ள திரு மென்டாஸ், முன்னாள் கவுன்சிலரும் தமிழர்களின் நண்பருமான ஜிம் கரிஜியானிஸ் அவர்களின் முன்னாள் தலைமை அதிகாரியாக கடமையாற்றியவர் என்பதும், அதனால் தற்போதைய மேயர் ஜோன ரோரி அவர்கள் திரு மென்டாஸின்; வெற்றியை வரவேற்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தில் எமது கனடா உதயன் பத்திரிகையும் வெற்றியீட்டியுள்ள திரு மென்டாஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த அதேவேளை, அவருக்கு வாக்களிக்கும் வண்ணம் வேண்டுகோள் விடுததிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நிர்வாக ரீதியாக வெள்ளை மாளிகையை கொந்தளிப்பான நிலையில் விட்டுச் செல்லும் டொனால்ட் ட்ரம்ப்