இலங்கையில்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் இந்த வருடம் திருத்தம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச இலக்குகளை வெற்றி கொள்ளக் கூடிய வகையில் நாட்டின் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சர்வதேச ரீதியில் பாரிய தொழில் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், தாதியர்களுக்கு டிப்ளோமாவை மட்டுமே பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பதாகவும், பட்டமொன்றை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது போன்ற பல்வேறு குறைபாடுகள் தற்போதைய கல்வி முறைமையில் காணப்படுவதாகவும், அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இவற்றை நிவர்த்தி செய்ய திருத்தச் சட்ட மூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அவசியமாகும் எனவும், கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.