இலங்கை மலைநாட்டில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில் 16.01.2021 அன்று உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்ட ஸ்ரீபாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மணி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 9ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.