கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் TORONTO VOICE OF HUMANITY என்னும் ‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் மலை நாட்டில் ஹட்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிஓயா கீழ் டிவிசன்- பகுதியில்இயங்கும் இருபது-இருபது இளைஞர்கள் அமைப்பு மூலமாக அங்கு வாழும் தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை காலை வழங்கப்பெற்றன.
இந்த பணியை ஏற்று நிறைவோடு நடத்திய . இருபது – இருபது இளைஞர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.. அத்துடன் சென்னையில் நண்பன் இணையத்தளத்தின் பொறுப்பாளர் அருண் கதாகரன் அவர்களுக்கும் நன்றி.
மேற்படி நற்பணிக்கு தேவைப்பட்ட ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை திரட்டும் நிதித் தேவை தொடர்பாக எமது அமைப்பு ( TORONTO VOICE OF HUMANITY ) தொடர்பு கொண்டபோது எமது வேண்டுகோள் ஏற்று நிதிப் பங்களிப்புச் செய்த பின்வரும் நண்பர்களுக்கு நன்றி
இந்நிலையில், மேலும் பல நற்பணிகளுக்கு தொடர்ச்சியாக எமது அமைப்பிற்கு வேண்டுதல்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே சிறு தொகை அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் அமைப்பின் பின்வரும் முக்கிய உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளவும்.
திரு சங்கர் நல்லதம்பி – 416 270 4343
திரு மரியாம்பிள்ளை மரியராசா- 416 669 6437
திரு லோகேந்திரலிங்கம்- 416 732 1608