ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனாமுடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம் என சர்வமத நல்லிணக்கத்திற்கான பிரதிநிதி மற்றும் தமிழ்மொழி அடங்கலாக பன்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படும் பொஹவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
மனிதன் இயற்கைக்கு செய்த தவறினால் இயற்கை மனிதனுக்கு கொடுத்த முதலாவது தண்டனை சுனாமி இரண்டாவது தண்டனை கொரோனா ஆகும்.
கொடிய கொரோனா இந்த உலகத்தை விட்டு நீங்குவதற்கு எல்லா பிரார்த்தனைகளையும் செய்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அம்பாறையில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.