மன்னார் நிருபர்
(17-01-2021)
மன்னார் மடு பிரதேச செயலக பிரில் உள்ள வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட முன்பள்ளி சிறார்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ரியா பண பரிமாற்று நிறுவனத்தின் அனுசரணையில் ஸானு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சந்தாம்பிள்ளை ஜேசுதாசன் தலைமையில் மடு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
1000 மாணவர்களுக்கான கற்றல் உபகரங்கள் 100 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் செயற்திட்டத்தின் கீழ் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள பூமலர்ந்தான் , குஞ்சுகுளம் , மாதாகிராமம் , பெரிய முறிப்பு, தேக்கம் பகுதிகளை சேர்ந்த 50 முன்பள்ளி சிறார்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களும் காக்கையன்குளம் இரணை இலுப்பைக்குளம் , முள்ளிக்குளம் , பாடசாலைகளை சேர்ந்த 24 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும் மேற்படி வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் மடு பிரதேசச் செயலாளர், மடு சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் ஸானு அறக்கட்டளையின் உத்தியோகஸ்தர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.