ராஜகிாிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் காணியொன்றின் அருகில் மண்மேடொன்று சாிந்து வீழ்ந்ததில் சிக்குண்ட இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். காப்பாற்றப்பட்ட இருவாினதும் நிலை அபாயகரமானதாக இல்லையென காவல் துறை தொிவித்துள்ளது.
இன்று காலை சுவரொன்றை நிர்மாணிப்பதற்காக சென்றிருந்த வேளையிலேயே இம்மண்மேடு சாிந்து வீழ்ந்துள்ளதோடு, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவரே இவ்வனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.