முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கடந்த கால நிலைமைகளினால் தமது பிள்ளைகளையும் உறவுகளையும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினாலும் காலநிலையினாலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடைத்துணிகள் மற்றும் புத்தகப்பைகளை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 60,000 பெறுமதியில் 30 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் பாடசாலை சீருடைத்துணிகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.