‘கனடா உதயன்’ பத்திரிகை நிறுவனத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு பெப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் நடத்தும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகளாவிய பேச்சுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு அனலை எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி HD TV மற்றும் MON தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றிலும் ஒளிபரப்பாகவுள்ளன. அத்துடன் வேறு பல நட்பூடகங்களின் ஊடாக இணையவழி ஊடவும் எடுத்துவரப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பேச்சுப் போட்டி விளம்பரப் பிரசுரத்தில் காட்டப்பட்டுள்ள இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 13 அரசியல் தலைவர்களில் தமக்கு பிடித்தமான யாராவது ஒருவரைப் பற்றி விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் 5 நிமிடத்திற்கு மேற்படாமல் பேச வேண்டும்.
இதுவரை போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் சில நாட்களுக்குள் uthayannews@yahoo.com என்னும் மின்னஞ்சல் ஊடாகவோ அன்றி 1416 732 1608 என்னும் இலக்கத்தில் whatsApp ஊடாகவோ விண்ணப்பிக்கலாம். எல்லாமாக எட்டு பணப்பரிசுகள் உண்டு.
மேற்படி பேச்சுப் போட்டிக்கு இலங்கை, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து நடுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.