யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அமரர் இந்திராதேவி கமலநாதன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு ஆவுஸ்ரோலியா நாட்டில் வாழும் அவரது குடும்பத்தினர் கமலநாதன் சர்மிலன் வழங்கிய ரூபா 50,000 நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் தமது உழைப்பாளி பிள்ளைகளை இழந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தனிமையில் வாழும் 16 முதியோர் குடும்பங்களுக்கு தலா ரூபா 3,130 பெறுமதியில் உலர் உணவு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.