கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் (TORONTO VOICE OF HUMANITY)ஏற்பாட்டில் கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை 26ம் திகதி இடம்பெறவுள்ளது.
மிகவும் பின் தங்கிய பிரதேசமான மாயவனூர் பகுதியில் உள்ள மாயவனூர் வித்தியாலய மாணவர்களின் புலமைப் பரிசில் சித்தியை கௌரவிக்கும் முகமாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.
கனேடியே தமிழ் உறவுகளின் அமைப்பான ரொன்ரோ மனிய நேயக் குரல்(TORONTO VOICE OF HUMANITY)அமைப்பின் நிதி உதவியில் தாயகத்தில் உள்ள ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பு செய்துள்ளது.
நாளை தாயகத்தில் இயங்கும் ஈழத்தமிழ் கலை இலக்கிய பண்பாட்டுக்கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நற்பணி வைபவத்திற்கு கனடாவிலிருந்து நிதி அன்பளிப்பை எமது ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பிற்கு வழங்கிய பெருந்தகைகள் பின்வருவோர் ஆவார்கள்:-
திரு சாந்தா பஞ்சலிங்கம்- தொழிலதிபர்- தலைவர்- கனடா தமிழர் வர்த்தக சம்மேளனம், திரு ரஜீவ் செபராசா- முன்னாள் ஆசிரியர் -வவுனியா மற்றும் உரிமையாளர் கனடா கெம்சோனிக்ஸ் பாதுகாப்பு கருவிகள் நிறுவனம்,மற்றும் திரு பாலா லோகன்- வீடு விற்பனை முகவர் கனடா, டாக்டர் கதிர் துரைசிங்கம்-கனடா ஆகியோர். அவர்கட்கு எமது நன்றி.
இந்த கற்றல் உபகரங்கள் கையளிக்கும் வைபவத்தின் செய்தி மற்றும் புகைப்படங்கள் எமது செய்தி ஊடகங்களில் சில நாட்களில் பதிவேற்றம் செய்ய்பபடும் .
இவ்வாறான பல நற்பணிகளுக்கு எமது அமைப்பிற்கு தாயகத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பல வேண்டுகோள்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன.
எனவே எமது அமைப்பின் மூலம் நற்பணிகளை ஆற்றுவதற்கு நீங்களும் ஒரு அணிலாகவோ அன்றி யானையாகவோ இருக்க விரும்பினால் கீழே உள்ள எமது அமைப்பின் முக்கிய அங்கத்தவர்களோடு தொடர்பு கொள்ளவும்
திரு சங்கர் நல்லதம்பி- 416 270 4343
திரு மரியராசா மரியாம்பிள்ளை0 416 669 6437
திரு ஆர். என். லோகேந்திரலிங்கம்- 416 732 1608
கனடா TORONTO VOICE OF HUMANITY அமைப்பு