ஈழத்திரையுலகில் ந. கேசவராஜா அவர்கள் ஒரு இயக்குநராக, கதையாசிரியனாக, வசனகர்த்தாவாக, நடிகனாகக் காத்திரமான பங்களிப்பை நல்கிவந்தவர். கடந்த ஜனவரி 9ஆம் திகதிதனது 58 ஆவதுவயதில் அமரத்துவமடைந்த கேசவராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியினரால் நேற்று (24.01.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்றக்கலா மண்டபத்தில் நினைவரங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அமரர் கேசவராஜா அவர்களுடன் இணைந்து திரைத்துறையில் பணியாற்றிய இயக்குநர் திருமதி ஷாலினிசாள்ஸ், இசையமைப்பாளர் கண்ணன் முரளி, மூத்தபடைப்பாளிதிரு. நா. யோகேந்திரநாதன் ஆகியோரும் அரசியல் ஆய்வாளர் திரு. நிலாந்தன் அவர்களும் நினைவுரைகளைஆற்றியிருந்தனர்.
கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நினைவரங்குநிகழ்ச்சியில் கேசவராஜா அவர்களின் பிஞ்சுமனம், அம்மாநலமா, கடலோரக்காற்று, உம்மாண்டி, மூவர், எழில்,வெடிமணியமும் இடியன் துவக்கும் ஆகியதிரைப்படங்களில் இருந்துகாட்சிகள் தொகுக்கப்பட்டுத் திரையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஈழத்திரைச் செயற்பாட்டாளர்அமரர். கேசவராஜா அவர்களின் நினைவரங்கு
ஈழத்திரையுலகில் ந. கேசவராஜா அவர்கள் ஒரு இயக்குநராக, கதையாசிரியனாக, வசனகர்த்தாவாக, நடிகனாகக்காத்திரமான பங்களிப்பை நல்கிவந்தவர். கடந்த ஜனவரி 9ஆம் திகதி தனது 58 ஆவது வயதில் அமரத்துவமடைந்த கேசவராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியினரால் நேற்று (24.01.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்றக்கலா மண்டபத்தில் நினைவரங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அமரர்கேசவராஜா அவர்களுடன் இணைந்து திரைத்துறையில் பணியாற்றிய இயக்குநர் திருமதி ஷாலினி சாள்ஸ், இசையமைப்பாளர் கண்ணன்முரளி, மூத்தபடைப்பாளி திரு. நா. யோகேந்திரநாதன் ஆகியோரும் அரசியல் ஆய்வாளர் திரு. நிலாந்தன் அவர்களும் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
கலை இலக்கிய அணியின் துணைச்செயலாளர்கை. சரவணன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நினைவரங்கு நிகழ்ச்சியில் கேசவராஜா அவர்களின் திரைப்படங்களில் இருந்து காட்சிகள் தொகுக்கப்பட்டுத் திரையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.