வட்டு இந்து வாலிபர் சங்க கனடாக்கிளையின் வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வட்டுக்கோட்டை பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்று வரும் கல்வியில் ஆர்வமுள்ள 100 மாணவர்களுக்கு ரூபா 60,000 பெறுமதியில் 1000 அப்பியாச கொப்பிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கனடாக்கிளையின் பொங்கல் விழா சிறப்புற நடைபெற மாணவர்கள் சார்பிலும், வட்டுக்கோட்டை வாழ் மக்களின் சார்பிலும் மற்றும் தாய் சங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம்.