கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அங்கத்தவர்களுக்காக நடத்தும் இணையவழி கலந்துரையாடலில் ஒன்றாரியோ மாகாண இணை அமைச்சர் கலந்துகொள்கிறார். மேற்படி கருத்தரங்கில் சிறு வர்த்தகங்களுக்கான துணை அமைச்சர் கௌரவ சர்க்காரியா சிங் மற்றும் ஸ்காபுறோ மத்திய தொகுதி மாகாண பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்ரினா மிட்டஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இந்த கருத்தரங்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம் திகதி மாலை 7.00 மணிக்கு நடைபெறும். கருத்தரங்கில் ஒன்றாரியோ மாகாண அரசால் வழங்கப்படுகின்ற சிறு வர்த்தகர்களுக்கான நிதி உதவி பற்றிய விபரங்களை மாகாண அரசின் பிரதிநிதிகளான துணை அமைச்சர் மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு விளக்கமளிப்பார்கள்.
..இணையத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய இணைப்பிலக்கம் மற்றும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
Join us on Monday, February 1st 2021at 7:00 p.m. by Zoom for our “M2M by Zoom” virtual networking event. This week we have two special presenters to discuss Small Business Grant from the Government of Ontario.