கன்னித் தமிழின் செழுமையும், வண்ணத் தமிழின் வசீகரமும், தொன்மைத் தமிழின் நாகரீகமும், முன்னைத் தமிழனின் வீரமும்.ஒருங்கே சேர இலக்கிய நயத்துடன் படைக்கப்பெற்று பல தடவைகள் ‘கல்கி’ இதழில் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ மீண்டும் உங்கள் கண்களுக்கும் எண்ணங்களுக்கும் இதமளிக்க எழுத்தில்..வருகின்றான்..
அந்த அற்புதமான வரலாற்று நாவலை தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் உள்ளவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த அற்புதமான படைப்பை மீளவும் எழுதி எமது வாசகர்களுக்காக தமது இலக்கியத் தாகத்தோடு படைத்தளிக்கின்றார்கள் கனடா வாழ் ‘கல்கி’யின் அபிமானிகள் மேரி ஜெனிரா செபஸ்ரியாம்பிள்ளை மற்றும் மாதினி நிமலன் ஆகியோர்.
பெப்ரவரி முதல்வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் வாரா வாரம் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் புதுவடிவில்.. உ ங்களுக்காக.. காத்திருங்கள்
எமது கனடா உதயன் வெள்ளி விழா ஆண்டில், எமது பத்திரிகையிலும், ஆகிய இணையத்தளங்களிலும் எமது முகநூலிலும் பொன்னியின் செல்வனை அடுத்த வாரம் தொடக்கம் சந்திக்கத் தவறாதீர்கள்.
கனடா உதயன் ஆசிரிய பீடம்