இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்று வெள்ளிக்கிழமை 29ம் திகதி வெளியிடப்பட்ட பாதுகாப்பு மீளாய்வு 2020 வெளியீட்டு நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) சுகாதாரம் சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய கருப்பொருள் தொடர்பில் கலந்துரையாடி தற்காலத்தில் அவசியமாகும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் நாடுகடந்த குற்றச் செயல்கள் எனும் தற்கலாலத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் ஆராயும் ஒரு முக்கிய தளமாக அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த முயற்சியானது மத தீவிரவாதம் தீவிரமயமாக்கல் மற்றும் போதைப்பொருட்களின் பெருக்கம் ஆகியவற்றை வெற்றிகொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் உதவும் வகையிலும் அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும் அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு சூழலில் உணரப்பட்ட தற்போதைய அச்சுறுத்தல்களை அடையாளம் காட்டும் வகையில் இன்று வெளியிடப்பட்ட பாதுகாப்பு மீளாய்வு 2020 தொடர்பாக மேலும் தெரித்த அவர்
பாதுகாப்பு மதிப்பீட்டைத் தொடங்குவதற்கான நோக்கங்களை கொண்டதாக ஆய்வுக்கட்டுரைகள் துல்லியமாக சீரமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்ட பாதுகாப்பு மீளாய்வு 2020 வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு மாநாடு 2020 தொடர்பான் ஆய்வுக்கட்டுரை ஒன்றும் இந்த அமர்வின் போது பாதுகாப்பு செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு மீளாய்வு 2020 உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஆறு ஆவணங்களின் தொகுப்பாகும். இதன் ஆசிரியர்கள் இலங்கை இந்தியா ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
பாதுகாப்பு மீளாய்வு முதல் வெளியீடு 2017ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மீளாய்வு 2020 மூன்றாவது வெளியீடாகும்.
பாதுகாப்பு அமைச்சின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் வெளியீடான பாதுகாப்பு மீளாய்வு எனும் இதழ் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கருத் திட்டத்தில் முக்கிய பங்காற்றும் என பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கை வடிவமைப்பிற்கான ஆராய்ச்சிகளால் அண்மைய பாதுகாப்பு முன்னேற்றங்களை உறுதிப்படுத்துவதில் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பங்களிப்பை கோடிட்டு காட்டிய ஜெனரல் குணரத்ன பாதுகாப்பு மீளாய்வு 2020 ஆரம்பம் என்பது தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி தொடர்பான படைப்புகளின் மற்றொரு படைப்பாக கருதப்படுகிறது.
பாதுகாப்பு மீளாய்வு இதழின் முக்கிய பாத்திரம் அதன் எழுத்தாளர் குழாம் அவர்கள் பல்வேறு துறைகளின் கீழ் ஆய்வுக்காக தமது காலத்தையும் நேரத்தையும் அர்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் முடிவடைந்த கொழும்பு மாநாடு 2020 தொடர்பாக குறிப்பிட்ட அவர் அது இலங்கைக்கு ஒரு விரிவான பாதுகாப்பு முன்னுதாரணம் என்ற தலைப்பில் ஆரம்பகால தேசிய மாநாட்டின் ஆய்வு இதழினை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொளப்பட்டதாக தெரிவித்தார். அத்தகைய முக்கியமான மாநாட்டிற்கான இதழ்கள் எதிர்கால பதிவு நோக்கங்களுக்காக மிகவும் அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு மீளாய்வு 2020 மற்றும் கொழும்பு மாநாடு 2020 பற்றிய ஆய்வு இதழ்கள் பாரம்பரிய தேசிய பாதுகாப்பு கலந்துரையாடலை உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிபுணத்துவத்துடன் ஒரு பரந்த மற்றும் ஒத்துழைப்பு தளமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு கற்கை நிலையம் என்பது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பிரதான தேசிய பாதுகாப்பு சிந்தனை தொட்டி ஆகும்.
இந்த நிறுவனம் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சிற்கு பரந்தளவில் பரிந்துரைகளை வழங்கிவருகின்றது.
இன்றைய அங்குரார்பண நிகழ்வில் வெளியுறவு அமைச்சக செயலாளரும் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகமுமான அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (ஓய்வு) வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு மீளாய்வு 2020 இதழ் மற்றும் கொழும்பு மாநாடு 2020 குறித்த ஆய்வுக் கட்டுரை ஆகியவற்றையும் நினைவுச் சின்னத்தையும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மேலதிக செயலாளர் (தேசிய பாதுகாப்பு) சமந்தி வீரசிங்க பிராண்டிக்ஸ் குழு நிர்வாகத் தலைவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு) கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகள் கற்கை பிரிவின் தலைமை பீடாதிபதி கலாந்தி மனீஷா பாஸ்குவல் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ரியர் அட்மிரல் திமுத்து குணவர்தன (ஓய்வு) தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் நிர்வாக பணிப்பாளர் நில்மினி அல்விஷ்ஷேவா கல்வியில் எழுத்தாளர் குழாம் சிந்தனையாளர்கள் முப்படை அதிகாரிகள் அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.