இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று 28ம் திகதி வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நோய் தாக்கம் அதிகரித்த காரணத்தால் நேற்று காலை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
பின்னர் உணவு உட்கொள்ள முடியாத அளவு கொரோனா தொற்று அறிகுறிகள் அதிகரிக்கத் தொடங்கியதால் நேற்று இரவு அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.