அதிகார போதையில் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சித்தால் அரசாங்கத்திற்கு அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.
நாம் தேசிய சொத்துக்களை விற்க மாட்டோம் எனக் கூறியே ஆட்சிக்கு வந்தோம். அதனால் எமக்கு அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை. அதனால் இந்த விடயத்தில் மக்களின் குரலுக்கு செவிகொடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறோம்.
இதனை இந்தியாவிற்கு கொடுப்பதாக சொல்கின்றனர். அப்படி செய்தால் அதற்கான பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டி வரும். காரணம் மக்கள் முட்டாள்கள் அல்ல. யுத்தத்தை வெற்றிகொண்ட மிகப்பெரிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் 2015ம் ஆண்டு தோல்வியடையச் செய்தனர். அதன்பின் இரண்டு வருடங்களில் நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்தனர். அப்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்மோடு இருந்தது. அதனால் அதிகார போதை தலைக்கேறி செயற்பட முடியாது’.
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.