ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட்-19 தொற்று அதிகரிக்கும் பிரதேசங்களாகக் கருதப்படும் ஒட்டாவா, லண்டன், கிழக்கு ஒன்றாரியோ நகரங்கள் மற்றும் தென்மேற்கு ஒன்றாரியே நகரங்கள் ஆகிய இடங்களில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் கல்விச் சபைகளும் சுகாதாரப் பிரிவுகளும் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகின்றது கடந்த ஜனவரி 11ம் திகதி மீண்டும் திறக்கப்பெற்ற ஒன்றாரியோ பாடசாலைகளில் குறைந்தது 14 பேருக்கு தொற்று இருந்ததாக கண்டு பிடிக்கப்பட்டதும் இந்த தயக்கத்திற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.
கண்டு பிடிக்கப்பட்ட 14 தொற்றாளர்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது
தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சுமார் 280,000 மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பவுள்ள நிலையில் இவர்கள் தொடர்பாக கல்விச் சபைகளும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் அதிக சிரத்தை எடுத்து எவ்வாறு இந்த சவால்களுக்கு முகம் கொடுக்கலாம் என்று ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சட்பெறி நகரத்தில் உள்ள ஆறு பாடசாலைகளில் சுமார் 22 பேருக்கு தொற்றுள்ளதை பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிறிஸ்தவப் பாடசாலையிலும் குறிப்பிட்ட சில மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாவும் இதனால் அங்கும் பதற்றம் நிலவுவதாகவும் அறியப்படுகின்றது. மேலும் கடந்த 26ம் திகதி சட்பெறி நகரத்தின் சுகாதாரப்பிரிவினர் செய்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வராதவிடத்து அடுத்த வாரத்தில் பாடசாலைகளுக்கு மாணவர்களை வகுப்புகளில் பயில அனுமதிக்கலாமா என்பதையும் அதிகாரிகள் முடிவெடுக்க முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகின்றது