(மன்னார் நிருபர்)
(30-01-2021)
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (30) சுகாதார துறையினருக்கு முதல் முதலாக செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து இன்றைய தினம் சனிக்கிழமை(30) காலை 8.45 மணியளவில் சுகாதார துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.
முதலாவது கொவிட்-19 தடுப்பூசியை மன்னார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.கே.வின்சன் அவர்களுக்கு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோருக்கு செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சுகாதார துறையிருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதே வேளை மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
2ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.