துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது.