ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் விசாரணை அறிக்கை பக்கங்களை முத்திரையிட சுமார் 10 மில்லியன் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியாளர்களின் கருத்துக்கள் அடங்கிய 40000 பக்கங்களும் ஆணைக்குழுவின் பக்கங்களையும் சேர்த்து ஒரு லட்சம் பக்கங்களைக் கொண்டதாக குறித்த அறிக்கை தயார்படுத்தப்படவுள்ளது.
ஆணைக்குழுவினால் 214 நாட்களில் 457 பேரிடம் 640 தடவைகள் சாட்சிகள் பெறப்பட்டுள்ளன. இரகசிய ஆவணங்கள் 640 மற்றும் ஏனைய 1556 ஆவணங்கள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.
இன்றுடன் ஆணைக்குழுவின் பதவிகாலம் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.