(மன்னார் நிருபர்)
(1-02-2021)
பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதி றாஹுல ஹிமி தேரர் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு இன்று திங்கட்கிழமை(1) காலை திடீர் விஜயத்தை மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினரை மத நல்லினக்க அடிப்படையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதம குரு கருனாநந்த குருக்கள , திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.இராமக்கிருஸ்ணண்,மன்னார் அன்னை இல்ல பொறுப்பாளர் எஸ். பிருந்தாவனநாதன் மற்றும் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட மக்களின் நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.