ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு வங்கியின் நிர்வாகசபை அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க, ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது