இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்து தங்கள் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களை அவர்களுக்கு கல்விக்கான விசா மற்றும் படித்துக் கொண்டே வேலை செய்யும் Work Permit ஆகியவற்றை வெற்றிகரமாகப் பெற்று அவர்களை கனடாவிற்கு அனுப்புவதற்கான பணிகளில் கொழும்பு Flex Institute முகவர் நிறுவனம் தீவிரமாக செயற்படுகின்றது.
மேற்படி Flex Institute நிறுவனம் கொழும்பில் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது. அத்துடன் கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான மேலதிக தகுதிகளைப் பெறவும் இந்த Flex Institute நிறுவனம் உதவி வருகின்றது.
கனடாவிற்கு கல்விக்கான விசா பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தம்பதியான திரு. திருமதி நவநீதன் இருவரும், இரு நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கனடாவிற்கு பயணமாவதற்கு தயாராக நிற்பதையும், அவர்களை வழி அனுப்பச் சென்ற மேற்படி Flex Institute முகவர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜெகன் மற்றும் பங்காளர் விஜேய் ஆகியோர் இங்கேயுள்ள படத்தில் காணப்படுகின்றார்கள்.