சொற்கள் என்பவை வெறும் எழுத்துக்கூட்டங்கள் அல்ல. அவை எந்த இனத்தின் மொழி சார்ந்த சொற்களாக இருந்தாலும் அவை உணர்வைக் கொண்டவை. சொற்களைப் பயன்படுத்துதல் என்பது முதலில் உரையாடலுக்கான பாதையாகவும் உணர்வுகளை வெளிப்படுத்தும்
காவிகளாகவும் இருந்தன.
அவை மனிதனைச் சிந்திக்க வைத்து அதற்கான எழுத்து வடிவங்களை உருவாக்கின. ஓலியிலிருந்துதான் தோன்றியது மொழி.இந்த மொழிதான் மனித சமூகத்தை சிந்திக்க வைத்து தேடலை நோக்கி நகர்த்தியது.மொழிகள் பலவாக இருந்த போதும் அந்த மொழிகளில் காணப்படுகின்ற ஏன்? ஏதற்கு? எப்படி? என்ன? என்ற சொற்களின் விடைகளால் நுண்ணறிவு
திறக்கப்பட்டு மனிதகுலம் வளர்ச்சியடைந்திருக்கின்றது.
உலகை உருவாக்கியவர்களில் பெரும் பங்கு வகிப்பவர்கள் தத்துவஞானிகளும், கோட்பாட்டளர்களும் விஞ்ஞானிகளுமேயாகும்.தத்துவத்தின் மீதும் கோட்பாட்டின் மீதும் விஞ்ஞானத்தின் மீதுந்தான் மானிட வர்க்கத்தின் வளர்ச்சி கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது.
ஏன்? ஏன்ற கேள்வி ஒரு மனிதனிடம் எழும் போதுதான் இந்த உலகத்தால் அரிய உண்மைகளை அறிய முடிந்து.இன்று இப்பொழுது விநாடி இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டு விநாடிகளை நிமிடங்களாக நகர்த்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் எதன் மூலம் வாசிக்கிறோம் என்பதை உணர்வார்களானால் அவை யாவும் ஏன் என்று கேள்வி கேட்டு விடையாக தேடித் தேடி எடுத்த அறிவியல் சான்றுகளே காரணம்.
இன்று இந்த மனித குலம் தமது வாழ்வுக்காக அனுபவித்துக் கொண்டிருக்கின்ற விஞ்ஞானச் சான்றுகளாகட்டம் மனம் தழுவி அதனூடொழுகிய வாழ்வாகட்டும் அதற்கெல்லாம் காரணம் எண்ணங்களும் அந்த எண்ணங்களை ஏன் என்ற கேள்விக்கு உட்படுத்தியமையுமேயாகும்.
உதாரணமாக உங்கள் கண் முன்னால் இரண்டு கார்கள் வேறு வேறு திசையில் வந்த சந்தியில் மோதுகின்றன.ஆனால் அப்பொழுது கார்கள் மோதிக் கொண்டனவே என்ற பதட்டமும் காருக்குள் இருந்தவர்களுக்கு உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் கலங்கமும் ஏற்பட்டுவிடும்.அப்பொழுது அம்மோதiலைப் பார்த்தவர்கள் அவரவர் எண்ணப்படி ஒவ்வொரு விதமான கருத்தைச் சொல்வார்கள்.
மோதலுக்கான காரணமாக ஏன் மோதின? என்ற கேள்விகளைக் கேட்கும் போது விடை தானாகவே வருகின்றது. மோதிக் கொண்ட இடத்திற்கு உதாரணமாக ஒரு சந்தியில் 10.30 மணிக்கு ஒரு கார் வருமானால் அதே 10.30 மணிக்கு அதே சந்தியில் இன்னொரு கார் எதிரெதிரே சந்திக்குமானால் அவை மோதிக் கொள்ளும்.
அதற்குக் காரணம் ஒத்த நேரமே காரணம்.மோதிக் கொண்டமைக்கான காரணத்தைப் அம்மோதலைப் பார்த்தவர்கள் வேறு வேறு கோணத்தில் சிந்திப்பார்கள். ஆனால் ஏன் மோதிக் கொண்டன,இரண்டு கார்களுக்குமான சமநிலை எனத் தேடினால் விடை நேரந்தான்.இது ஏன் என்ற கேள்வியிலிருந்தே பிறந்தது.
ஐசாக் நியூட்டன் என்ற விஞ்ஞானி புவியீர்ப்பைக் கண்டு பிடிக்கும் முன்னர் அவர் காலத்தில் வாழ்ந்த சமகால சிந்தனையாளர்களாகட்டும் சராசரி மனிதர்களாகட்டும் மனிதர்கள் இயல்பாக பூமியில் இருக்கிறார்கள் என நினைத்திருக்கலாம்.ஆனால் புவியீர்ப்பே அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் தன்னுடன் இழுத்து வைத்திருக்கிறது
என்பதற்கு ஒரு அப்பிள் பழமே காரணமானது.
மரத்தினடியில் விழுந்த அப்பிள் பழம் ஏன் மேலே போகாமல் பூமியை நோக்கி விழுந்தது என்று ஐசாக் நியூட்டன் சிந்தித்தனால்தான் புவியீர்ப்பு விசையென்ற ஒன்று இருக்கின்றது என்பதை உலகம் அறிந்தது. (ஐசாக் நியூட்டனின் காலம் 1642 – 1727) ஏன் இரவு பகல் வருகின்றது என்று கலிலியோ சிந்தித்த போதுதான் பூமி கோள வடிவானது என்றும் அது சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும் உலகிற்கு நிதானமாகச் சொன்னார்.(கலிலியோவின் காலம் 1564 – 1642) கேத்தலில் சூடாகிக் கொண்டிருந்த தண்ணீரின் நீராவி,கேத்தலின் மூடியைத் தள்ளியதைக் கண்ட ஜோர்ஜ் ஸ்ரீபன்சனின் நீராவி கேத்தல் மூடியை ஏன் தள்ளியது அப்படியானால் நீராவியின் வலுச்சத்தியை மனித குலத்திற்குப் பயன்படுத்தலாம் என்ற தொடர் சிந்தனைதான் தண்ணீகை; கொதிக்க வைத்து அதனிடமிருந்து பெறப்பட்ட நீராவி உந்துதல் மூலமாக புகைவண்டி என்ற வாகனத்தின் என்ஜின் கண்டு பிடிக்கப்பட்டது.
ஏன்? ஏன்? தோடர்ச்சியான தொடர் சிந்தனையின் காரணமாகவே எண்ணிறந்த கோள்கள் பிரபஞ்சத்தில் மிதந்த போதிலும் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு இருப்பதற்கான விடையாகியது.
இவ்வளவுதான் சிந்தனையின் எல்லை என்று நிறுத்தமுடியாதவாறு இருந்த சிந்தனையின் வேகமும் ஒன்றிலிருந்து ஒன்று என அதிலிருந்து பின் அதிலிருந்து வெளிக் கிளம்பிய பலவாயிரம் கோடிச் சிந்தனைகளின் அலைகளே ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளையும், தத்துவஞானிகளையும், கோட்பாட்டாளர்களையும் உருவாக்கின.
பூமியில் நின்று மேலே பார்க்கும் போது எமது கண்கள் உள்வாங்கிய வெளியை வானம் அல்லது ஆகாயம் என்கிறோம். இது மனித குலம் சூட்டிய பெயர். ஆனால் அது ஒரு எல்iலையைக் கொண்டதல்ல. பூமியிலிருந்து விடுபட்டு ஒரு உதாரணமாக நாம் ஆகாயத்தை நோக்கித் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது பிரபஞ்சத்தின் ஊடாகப் பயணம் செய்வதேயாகும்.
பிரபஞ்ச வெளியில் ஈர்ப்பு விசையில்லை என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட போதும் அதற்கும் ஈர்ப்புச் சக்தி உண்டென்பதும் அதன் செயல்பாடு புவியீர்ப்புச் சக்தியோடு ஒத்தது அல்ல என்பதை விஞ்ஞான உலகம் நிரூபித்து வருகின்றது.
ஏன் பிரபஞ்சத்தில் பொருட்கள் மிதக்கின்றன என்று சிந்தித்த போது அங்கே ஈர்ப்புச்சக்தி இல்லையென்று விஞ்ஞானம் முடிவெடுத்தது. ஆனால் ஒரே முடிவை விஞ்ஞான உலகம் எக்காலத்திற்கும் கொண்டிருப்பதில்லை. பிரபஞ்சத்திற்கும் ஈர்ப்புச் சக்தி உண்டென்பதையும் ஆங்காங்கே காணப்படும் பிரபபஞ்ச கருந்துளைகளில் காணப்படும் ஈர்ப்புச் சக்தி கோள்களையே உள்ளிழுக்கக்கூடிய சக்தி வாய்ந்தவை என்பதை ஏன் என்ற கேள்விக்கூடாகவே உறுதிப்படுத்தியிருக்கின்றது.
ஏன் என்ற கேள்விகளால் விஞ்ஞானக் கருவிகள் மட்டும் கண்டு பிடிக்கப்படவில்லை.நாளாந்த வாழ்வில் ஏன் என்ற கேள்வியை முன் வைத்தே பல விடைகளைத் தேடியிருக்கிறோம்.
ஏன் இவ்வளவு காசைச் செலவழிக்க வேண்டும் என்ற கேள்வி சிக்கனத்தை கடைப்பிடிக்க வைத்து சேமிப்பை உருவாக்கியிருக்கின்றது.ஏன் படிக்க முடியவில்லை என்ற கேள்வி ஒருவனின் படிப்புக்கு தடையாக இருந்ததை தொடர் ஏன்களால் அவனின் இலக்கை அடைய முடிந்திருக்கிறது.
ஏன் என்ற கேள்விக்கான ஆய்வு சார்ந்த நுண்பார்வையை ஒரு குறிப்பிட்ட பக்கங்கங்களில் எழுதிவிட முடியாது.அது சார்ந்து எத்தனை நூல்களை எழுதினாலும் ஏன் என்ற தொடர் சிந்தனையின் ஆய்வு முற்றப்பெறவே முடியாது.
ஏன் கோவிட் 19 என்ற கொரோனா உயிர்க் கொல்லிக் கிருமி பரவியது என்று ஆராய்ந்தால் இலுமினாட்டிகளின் சதிச்சூட்சுமம் துலங்கும். ஏன் என்ற கேள்வியால் பிறக்கும் அடுத்தடுத்து தொடர் சிந்தனையில் பல ஏன்கள் பிறந்து கொண்டேயிருக்கும்…..