புல்லாங்குழலில் ஏழு துளைகளை அமைத்து இசையைக் கொண்டு வந்த அற்புதத்தை சங்ககாலத்திற்கு முன்னரே கண்டுபிடித்தவிட்டனர்.வேறு வேறு இசை வடிவங்களை காற்றும் கைவிரல்களுமே தீர்மானிக்கின்றன.
அதே போன்றுதான் எமது குரல் நாண்களும் காற்றுமே ஒலிவடிவாக மொழிகளைத் தீர்மானிக்கின்றன என்பதே அறுதியிட்டுச் சொல்லும் உண்மையாகும். உலக மானிடர்கள் ஒரே மொழியைப் பேசாமல் பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்களே இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை பேசும் அனைவரும் நின்று யோசிப்பதில்லை.வாயைத் திறந்தால் பேசும் திறன் வருகிறது என்பது ஒரு சிந்தனை ஓட்டந்தான்.
மொழி ஒலியினால் உருவாகிறது என்பதற்கு உதாரணமாக புல்லாங்குழலுடன் ஒப்பிடுகையில் இசையென்பதும் கலைவடிவத்தின் மொழிதான் என்ற சமாந்தரப் பார்வை கொண்டு பார்க்கையில் மனிதர்களின் சுவாசப் பைகளிலிருந்து வெளிப்படும் காற்று தெண்டைக்குழி குரல் நாண்களை அதிரச் செய்து மூளைக்கலங்களில் பதிவாகியுள்ள மொழி வேறுபாடுகளை நரம்பு மண்டலங்கள் வழியாக உணரச் செய்து ஒலி வாய்வழியாக மொழியாக வடிவமைக்கப்பட்டு வெளிப்படுகின்றது.
மொழியின் உருவத்தை காதுகள் வழியாக மூளைக் கலங்கள் உணருகின்றன. இதனை இன்னும் கொஞ்சம் இலகு ஒப்பீடாக ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளை உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்க்கையில்ரூபவ்எமது மூளைக் கலங்களில் பதிவிட்ட மொழி உணர்தலை நரம்பு மண்டலங்கள் அறிவிக்க சுவாசப்பைக் காற்றூதல் மொழியின் தன்மைக்கேற்ப குரல் நாண்களை அதிரச் செய்யரூபவ்ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்ரூபவ்பொருட்களின் வேறுபாட்டுக்கமைய எவ்வாறு ஒழுங்கமைத்தல் செப்பனிடுதல் என்ற பல நிலைகளைத் தாண்டி வெளியில் வருகின்றதோ அது போல மொழியின் வேறுபாட்டுக்கமைவாக தொண்டைக்குழி வழியாக வாயக்குள் வரும் மொழியொலி அதிர்வுகளை அண்ணாக்குரூபவ்நாக்கு பற்கள் என்பவை ஒருவருக்கு தேவையான மொழியை அதற்கமைவான ஒலியாக்கி வாய்வழியாக வெளியே விடுகின்றது.அவ்வாறு வெளியே வருகின்ற வேறு வேறான ஒலிகளுக்குப் பெயர்தான் மொழிகள்.
எனவே மொழி என்பது ஒலிதான் என்பதும் வேறு வேறு மொழிகளின் அடிப்படைத் தரவுகளை மூலைக்கலங்கள் சேமித்து வைத்து ஒருவர் கற்று வைத்திருக்கும் மொழிகளை பேச நினைக்கும் நேரத்தில் அதைப் பேச வைக்கின்ற ஒலிச் செப்பனிடுதலை சுவாசப்பைரூபவ் காற்றுரூபவ் அண்ணாக்குரூபவ் பற்கள் என்பவை செய்கின்றன.
பற்களுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கின்றது என்றாலும்கூட நாக்கு எமது வாய்க்குள் அங்கை இங்கை என்று தொட்டு எழுத்துக்களின் உருவங்களை ஒலியச்சாக கோர்த்து வாய்வழியச்சாக மொழியொலித் தாளாக வெளியே விடுகின்றது.
மொழிகள் வேறு வேறாக பேசப்படுவதற்குக் காரணமாகரூபவ்ஒரு மொழியைப் பேசுகின்று மக்கள் தொடர்ச்சியாக வாழுகின்ற நிலத்தைப் பொறுத்தும் காலநிலையைப் பொறுத்தும் குரல் நாண்களில் மாற்றம் ஏற்படுவதாகும்ரூபவ்இந்த மாற்றம் மரபணு வழியாக தொடர்ச்சியாவதால் குரல் நாண்கள் அவரவர்க்கான மொழியை உற்பத்தி செய்துவிடுகின்றன.
உதாரணமாக தமிழர்கள் ஒரு மரத்தை மரமென்றும் சொல்வதற்கும் ஆங்கிலேயர்கள் அதனை றீ என்று சொல்வதற்கும் குரல் நாணொலி சொல்லொலியாகத் தோற்றம் பெற்றுத் தொடர்வதற்கும் மரபணுத் தொடர்ச்சியே காரணமாகும். அதே வேளை மொழிகள் குரல்நாண் வழிச் சொல்லொலிகள் என்ற அடிப்பiடைக் காரணத்திற்கமையவும் இவை யாவும் ஒருவருக்கொருவர் தொடர்பாடல் மொழியொலி என்பதற்கமையவும் மொழிகளை உயர்ந்தவை தாழ்ந்தவை என்றும் காட்டுமிராண்டிகளின் மொழியெனத் தீர்மானிப்பதும் தவறேயாகும்.
மனிதர்களுக்கு பெயரிடுவதிலிருந்து உலகில் உள்ள அசையும் அசையாப் பொருட்கள் அனைத்தையும் இனம் கண்டறிவதற்காகவும் விளித்தலுக்காகவும் வைக்கப்பட்டவை குறியீட்டொலிகளேயாகும்.ஒலியே மொழிகளின் பிறப்பிடம் என்பதற்கமைய காட்டிடை வாழும் மனிதர்கள் வேறு வேறு விதமாக குரலொலிகள் மூலம் தம்முணர்வை வெளிப்படுத்தலும் அவர்களின் மொழியேயாகும்.
பல் போனால் சொல் போச்சு என்பார்கள்.ஒலிகளை மொழியாக அச்சுக் கோர்ப்பதில் பற்கலுக்கு பெரும் பங்குண்டு.அதே போல நாக்கிற்கும் பெரும் பங்குண்டு.நாக்கும் பற்களும் மொழிக்கான எழுத்துருவை உருவாக்கும் லேத்மிசின் போன்றதே. பற்கள் இன்றியமையாதது போன்ற நாக்கும் மிக இன்றியமையாததே.நாக்கின் வலுவிழத்தல் ஒலிக்குழறை ஏற்படுத்தி வாய்வழி மொழியொலிச் சிதறலை ஏற்படுத்தும்.