மன்னார் நிருபர்
4-1-2021
இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம் ஹேன்ட்ஸ் (Muslims Hands) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் ஐ.எஸ்.ஆர்.ஸி(ISRC) நிறுவனத்திடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாற்றுத் திறனாளிகள் 117 பேருக்கு இருசக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக இன்று வியாழக்கிழமை (4) ஒரு தொகுதி பயனாளிகளுக்கு இருசக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல் ஐ.எஸ்.ஆர்.ஸி(ISRC) நிறுவன பணிப்பாளர் மிஹ்லார், மன்னார் மாவட்ட பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.